சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் சினிமாவில் சமீபத்திய அறிமுகங்களில் தனது நடனத் திறமையால் மட்டும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாயிஷா. அவர் அறிமுகமான 'வனமகன்' படம் தோல்வியைத் தழுவினாலும், அதன்பின் சமீபத்தில் வந்த படங்களான 'கடைக்குட்டி சிங்கம்' பெரிய வெற்றியையும், 'ஜுங்கா, கஜினிகாந்த்' சுமாரான வெற்றியையும் பெற்றன. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சில புதுப் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் சாயிஷா பற்றிய சர்ச்சைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடிய சாயிஷா அந்தப் பிறந்த நாளை மதுபானங்களைப் பகிர்ந்து கொண்டாடினார் என பரவலாகச் செய்திகள் வெளிவந்தன. அதில் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டதும் புகைப்படங்களாகவே வெளியானது. இப்போது மற்றும் ஒரு சர்ச்சையாக பிரபுதேவாவுக்கும் சாயிஷாவுக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் புதிய செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
பிரபுதேவா பற்றி அடிக்கடி இப்படி சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் வருவது வழக்கம். இதில் அவருடன் புதிதாக சாயிஷா பெயரும் சேர்ந்து கொண்டுள்ளது.