ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் ரைஸா நடித்துள்ளனர். ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லை.
இந்நிலையில், இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, இந்தத் திரைப்படத்தைக் கலாச்சாரச் சீரழிவு என்று கூறலாம் என்று தைரியமாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
படத்தின் கதைப்படி ரைசாவைக் காதலிக்கிறார் ஹரிஷ் கல்யாண். ரைசாவோ அவரது காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் அவரோடு செக்ஸ் வைத்துக் கொள்கிறார். ரைசாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஹரீஷ் கல்யாண். ஆனால் அவரோ கல்யாணம் வேண்டாம், லிவிங் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 'பியார் பிரேமா காதல்' படத்தை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதோடு, இந்தப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பதால், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட படத்தை தயாரிப்பதா? என்று சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.