ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை : சென்னை, ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், கலைத்துறையில் கடைக்குட்டி நான், மூத்தவர் கருணாநிதி. தனிப்பட்ட முறையில் குடும்பத்தில் ஒருவரை இழந்த நிலையே இருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லும் ஆயிரம் ஆயிரம் நடிகர்களில் நானும் ஒருவன் என்றார்.
நடிகர் சங்கம் அஞ்சலி : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் திரையுலகினர் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் விஜய்சேதுபதி, சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, சுஹாசினி ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.