ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் உள்ள சில நடிகர்கள், நடிகைகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களின் வழிபாடுகளைச் செய்பவர்களாக இருப்பார்கள். கிறிஸ்துவராக இருந்தாலும் நடிகை சமந்தா, இந்து மதத்தைச் சேர்ந்த நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து, கிறிஸ்துவ முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது.
நேற்று சமந்தா திருமலை சென்று பெருமாளை வணங்கினார். அது பற்றிய செய்திகள் நேற்றே வெளியாகின. சமந்தாவுடன் பிரபல டிவி தொகுப்பாளினயான ரம்யாவும் உடன் சென்றுள்ளார். இருவரும் கீழ் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபயணமாக சென்று பெருமாளை வழிபட்ட தகவலை ரம்யா தெரிவித்துள்ளார். 3500 படிகளை இருவரும் இரண்டரை மணி நேரத்தில் ஏறிவிட்டார்களாம்.
“சமந்தாவுடன் திருப்பதி தரிசனம் மறக்க முடியாதது. 3500 படிகளை இரண்டரை மணி நேரத்தில் ஏறி முடித்துவிட்டோம். புதிய ஆரம்பத்திற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
சமந்தா நாயகியாக நடித்துள்ள 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்கள் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது.