Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிக்கத் தயாராகும் விக்னேஷ் சிவன் ?

06 ஆக, 2018 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivan-soon-in-Acting

நடிகர்கள் இயக்குனர்கள் ஆக மாறுவது குறைவுதான், ஆனால் இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது. சிலர் கதாநாயகனாகவும், சிலர் குணச்சித்திர நடிகர்களாகவும் மாறி தற்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். சில இயக்குனர்களிடம் நடிக்க வருவீர்களா என்று கேட்டால் அதெல்லாம் கண்டிப்பாக நடக்காது என்று சொல்வார்கள். ஆனால், சில வருடங்கள் கழித்து அவர்கள் கண்டிப்பாக நடிக்க வந்து விடுவார்கள். அப்படித்தான் ஒரு இயக்குனர் மாறப் போகிறார் போலத் தெரிகிறது.

சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி', விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்', சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அவருடைய சமூக வலைத்தளத்தில் சிலரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதில், நயன்தாராவும் இருக்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா ?. அவரைத் தவிர அனிருத், 'கோலமாவு கோகிலா' பட இயக்குனர் நெல்சன் மாணிக்கம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஒலிப்பதிவாளர் குணால்ராஜன் ஆகியோர் உள்ளனர். அவர்களுடன் தன்னுடைய புதிய நண்பர் என ஒரு டிரைனரைப் பற்றிக் கூறியுள்ளார்.

தன்னுடைய உடலமைப்பை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இயக்குனர்களை விட நடிகர்களுக்குத்தான் அதிகம் இருக்கும். விக்னேஷ் சிவன் புதிதாக உடற்பயிற்சிக்காக ஒரு டிரைனரிடம் பயிற்சி பெறுவதைப் பார்த்தால் அவர் விரைவில் நடிக்க வந்துவிடுவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக சில விஷயங்களை உணர்த்துவது விக்னேஷ் சிவன் வழக்கம். அப்படித்தான் நயன்தாராவுடனான அன்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த விதத்தில் இந்த டிரைனர் அறிமுகமும், நடிக்கத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த கேள்வியாக விக்னேஷ் சிவன் நாயகனாக அறிமுகமாக உள்ள படத்தின் நாயகி நயன்தாராவா என்பதாகத்தான் இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in