ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
18 வருடங்களுக்கு முன்பு காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் பூஜாகுமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து விட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஸ்வரூபம் படத்தின் மூலம் ரீஎண்டரி ஆனார். தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பாகம், உத்தம வில்லன். படங்களில் நடித்தார். விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது இதையட்டி அவர் பேட்டியளித்தார். அப்போது தொடர்ந்து கமல் படங்களில் நடிக்கிறீர்களே நீங்கள் கமலின் கம்பெனி நடிகையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், "அப்படியெல்லாம் இல்லையே... 5 வருடங்களாக அவருடன் நடித்து வருகிறேன். 3 படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து அவர் வாய்ப்பு தருகிறார். மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்திருக்கிறேன். பிஎஸ்வி கருடவேகா என்ற தெலுங்கு படத்தில் டாக்டர் ராஜசேகர் ஜோடியாக நடிக்கிறேன். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறேன். மற்றவர்கள் வாய்ப்பு தந்தால் நடிப்பேன்" என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலும் கமல் மனைவியாகவே நடிக்கிறேன். இரண்டாம் பாகத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. துப்பாக்கி சண்டை போடுகிறேன். அண்டர்வாட்டர் ஆக்ஷன் காட்சியில் நடித்திருக்கிறேன். இரண்டாம் பாக கதை இந்தியாவில் நடக்கிறது. ஆக்ஷன் படங்களில் இது தனி முத்திரை பதிக்கிற படமாக இருக்கும். என்றார்.