ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அதன்பின் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், மார்க்கெட்டில் பின் தங்கியிருந்தார். ஆனால், சமீபத்தில், ஜெயம் ரவியுடன் அவர் நடித்து வெளியான, டிக் டிக் டிக் படம், 'ஹிட்'டாகியதால், இப்போது, தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நாயகியாகி விட்டார். அவ்வகையில், நிவேதா பெத்துராஜை வெற்றிப்பட நாயகி, 'லிஸ்டில்' சேர்த்துள்ள கோடம்பாக்கத்தினர், அவரது சம்பளத்தையும் உயர்த்தி, புது படங்களுக்கு போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அதிர்ஷ்டம் வந்தால், தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!
— எலீசா