ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் டிவி வரலாற்றில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக கடந்த வருடம் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி இருந்தது. கமல்ஹாசன் முதல் முறையாக டிவி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கியதால், அந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு ஆரம்பமாவதற்கு முன்பே அதிகமாகியது. எதிர்பார்த்ததைப் போலவே நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசனை விடவும் தன்னுடைய செய்கைகளால் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியாவால் அந்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் ஆன ஆரவ் மற்றும் ஓவியா ஆகிய இருவரையும் இணைத்து காதல் கிசு கிசு கிளம்பியது. இருவருமே அதை மறுத்தனர். நிகழ்ச்சியை விட்டு ஓவியா பாதியில் விலகினாலும், ஆரவ் தான் பிக் பாஸ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் ஆரவ் தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். சில படங்களில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வந்தன. சில படங்கள் ஆரம்பமாகின என்றும் சொன்னார்கள். இருந்தாலும் எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. ஒரு வருடம் கழித்து இப்போதுதான் முதல் முறையாக அறிவிப்பு வரை வந்துள்ளது. இதனிடையே, அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'பியார் பிரேமா காதல்' படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.