ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகில் ஏற்படுத்திய பரபரப்புக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகத்திலும் தன்னுடைய பாலியல் குற்றச்சாட்டுக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. தன் மீதான் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு விளக்கமான பதிலை நேற்று ராகவா லாரன்ஸ் அளித்திருந்தார். அந்த பதில் இன்று காலையில்தான் பரவலாகியது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக எந்த ஒரு பெயரையும் குறிப்பிடாமல் தன்னுடைய பேஸ்புக்கில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. அதில், “அது முழுவதுமாக அறுக்கும் வரை, அதை இழுத்துவிடாதீர்கள். அது உங்களுக்கு நல்லது. நான் விசாரணைக்கு உட்கார்ந்தால், நிச்சயம் நீங்கள் தோற்றுப் போவீர்கள். உங்களுக்குச் சரி என்றால் உங்களுடைய படத்தில் வேலை செய்வேன். எனது திறமை உங்களுக்குத் தெரியும், உங்களது திறமை எனக்குத் தெரியும். நமது கூட்டணி சிறப்பானது,” என பதிவிட்டிருக்கிறார்.
அவர் அளித்திருக்கும் பதிலைப் பார்த்தால் அது ராகவா லாரன்சுக்கு சொன்னது போலத்தான் தெரிகிறது.
இதனிடையே மற்றொரு பதிவில் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்க தயார், என்னை ஆசீர்வதியுங்கள் என்று கூறியுள்ளார்.