ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அரசியலில் இறங்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் 'காலா' படத்திற்குப் பிறகும் படங்களில் நடித்துக் கொண்டிருப்பது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்போது அரசியலில் முழுவதுமாக இறங்கப் போகிறார் என பலரும் சந்தேகக் கண்ணேட்டத்துடன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'காலா' படம் வெளியீட்டிற்கு முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை ரஜினிகாந்த் ஆரம்பித்துவிட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் பற்றி கடந்த சில நாட்களாக சில தகவல்கள் பரவி வருகிறது. அது வதந்தியா அல்லது உண்மையா என்பது அவை பற்றிய அறிவிப்புகள் வரும் போதுதான் தெரிய வரும்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மற்றொரு படம் என ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணி கடைசியாக இணைந்த 'லிங்கா' படம் தோல்வியடைந்தது. ரவிக்குமார், ரஜினியை இயக்கவில்லை.
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இதுவரை இணைந்த்து இல்லை. பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் படங்களில் நடிக்க சம்மதித்த ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க மாட்டாரா என்ன என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா அல்லது அரசியலில் முழுவதுமாக இறங்குவாரா என்ற செய்தி வர வேண்டிய நேரத்தில் சரியாக வரும்.