Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்ப்படம் - 2 செய்த வசூல் சாதனை

23 ஜூலை, 2018 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Tamilpadam-2-box-office-collection

கடந்த வாரம் வெளியான தமிழ்ப்படம் 2 வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. இயக்குநர் சி.எஸ்.அமுதனுக்கு 50 லட்சம், மிர்ச்சி சிவாவுக்கு 50 லட்சம், காமெடியன் சதீஷுக்கு 20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் 3 கோடிக்கு விஜய் டிவிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஓவர்சீஸ் ரைட்ஸ் 75 லட்சத்துக்கும், கர்னாடகா ரைட்ஸ் 15 லட்சத்துக்கும் விற்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, ஹிந்தி ரைட்ஸ் இதுவரை பிசினஸாகவில்லை. கேரளா ரைட்ஸ் 15 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தயாரிப்பு செலவு 6 கோடியில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே 4 கோடியை திரும்ப எடுத்துவிட்டனர்.

1.5 கோடிக்கு பிரிண்ட் அண்ட் பப்ளிசிட்டி செய்து சொந்தமாகவே ரிலீஸ் செய்தார்கள். மொத்த முதலீட்டையும் மூன்றே நாட்களில் எடுத்துவிட்டனர். முதல் நாள் வசூல் 3 கோடி, 4 நாட்களில் 12 கோடி, 1 வாரத்தில் 20 கோடி வசூல் செய்த தமிழ்ப்படம் - 2 படத்தின் தயாரிப்பாளருக்கு 12 கோடி முதல் 15 கோடி வரை ஷேர் கொடுத்திருக்கிறது. சுமார் 10 கோடி நிகர லாபம்.

இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிக லாபம் கொடுத்த படம். முதலீட்டைவிட அதிக லாபம் தந்த படம்... தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்களுக்கு லாபம் கொடுத்த படம் தமிழ்ப்படம் - 2 மட்டுமே.

Advertisement
நரகாசூரன் படத்துக்கு தொடரும் பிரச்சனை?நரகாசூரன் படத்துக்கு தொடரும் ... கடைக்குட்டி சிங்கம் வசூல் சாதனை கடைக்குட்டி சிங்கம் வசூல் சாதனை


வாசகர் கருத்து (11)

Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
30 ஜூலை, 2018 - 06:52 Report Abuse
Vaidhyanathan Sankar பல் ஆண்டுகளுக்கு முன்னர் நிழல்கள் ரவி நடித்த சினிமா சினிமா என்ற தலைப்பில் வந்த thiraip படம் நினைவிற்கு வருகிறது
Rate this:
bal - chennai,இந்தியா
25 ஜூலை, 2018 - 14:04 Report Abuse
bal ஒரு காலத்தில் இந்த நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட சம்பந்தப்பட்டவர்கள், தியேட்டருக்கு போய் படம் பாருங்கள் என்று சொல்லி, இப்போது அநியாய கொள்ளை அடிக்கிறார்கள்....கீழ் நிலை ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தின சோற்றுக்கே வழியில்லை...ஆனால் இந்த முதலைகளும் நாயக நாயகிகளும் கொள்ளையோ கொள்ளை...மக்கள் பணத்தை...
Rate this:
AXN PRABHU - Chennai ,இந்தியா
25 ஜூலை, 2018 - 09:55 Report Abuse
AXN PRABHU தமிழ் படங்களில் கதாநாயகர் கதாநாயகி டைரக்டர்களுக்கு அளவுக்கு அதிகமான சம்பளம் தரப்படுகிறது. இது படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைய முதல் காரணம். அடுத்து தியேட்டர்களில், டோக்கட் விலை, பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் விலை எல்லாம் பகல் கொள்ளை. இதன் காரணமாகவும் மக்கள் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு செல்ல தயங்குகிறார்கள். அதுவும் படங்கள் வணிக ரீதியாக தோல்வி அடைய, முக்கியமான இரண்டாவது காரணம். அமுதன், பாண்டிராஜ் போன்றவர்கள் குறைந்த செலவில் நல்ல படங்களை அளிப்பதால் வெற்றி காண்கிறார்கள். இதை, கதாநாயகன் கதாநாயகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கும் தயாரிப்பாளர்கள் உணர வேண்டும்.
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
24 ஜூலை, 2018 - 16:01 Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) ஆனா படம் மொக்க . முதல் பாகம் போல நல்லா இல்ல
Rate this:
Sundar Raj - TRIVANDRUM,இந்தியா
24 ஜூலை, 2018 - 15:31 Report Abuse
Sundar Raj எங்கள் செயல் தலைவர் கமெடி ஒன்னு கூட படத்தில் இல்ல . அது ஒண்ணுதான் எனக்கு வருத்தம்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in