ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவின் அடுத்த கட்டமாக தற்போது வெப் சீரியல் வளர்ந்து வருகிறது. மாதவன், நந்தா, பாபிசிம்ஹா, பிரியாமணி, உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் வெப் சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சுனைனா.
ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தவர் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நடித்தார்.
இப்போது ஜே.எஸ்.நந்தினி இயக்கும் நிலா நிலா ஓடி வா என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். இதில் சுனைனாவுடன் ஸ்ரீகிருஷ்ணதயாள், அஸ்வத், மிஷா கோஷல், அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறியதாவது:
அஸ்வின், ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. சுனைனா ஒரு வாம்பயராக நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரது அழகிய தோற்றம் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு ஆகியவை கலந்து கதாபாத்திரத்திற்கு உயிராக அமைந்தன. ஒரு வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் - காமெடி தொடர் என்றார்.