14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் கிருஷ்ணா புதிதாக நடிக்கும் படத்திற்கு வானவராயன் வல்லவராயன் என்று பெயரிட்டுள்ளனர். கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா, அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு வானவராயன் வல்லவராயன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த பி.பாண்டியன், இந்த படத்தை தயாரிக்கிறார். ராஜா மோகன் படத்தை இயக்குகிறார். இவர், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கியவர். இப்படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து தம்பி ராமையா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிருஷ்ணா ஜோடியாக நடிக்க ஒரு முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.