ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக 3டி தொழில்நுட்பம்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நவீன கேமராவை பயன்படுத்துகிறார்கள். இந்தவரிசையில், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கும் 'லிசா படமும் இணைந்துள்ளது.
'ராஜா மந்திரி' படத்தை தயாரித்தவரும் 'மதுரை வீரன்' படத்தை இயக்கியவரும், ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் படம் 'லிசா'. அஞ்சலி கதையின் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை பி.ஜி.முத்தையாவிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.
சாம் ஜோன்ஸ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு நடிக்கும் இந்த படம் திகில் படமாக உருவாகிறது. இது இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்.