ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த 2.0 படம் (எந்திரன் 2ம் பாகம்) வருகிற நவம்பர் மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இது நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல முறை ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சங்கர் நேற்று தனது டுவிட்டரில் இதனை வெளியிட்டார் "கிராபிக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பணி எப்போது முடிவடையும் என்பதை தெரிவித்து விட்டனர், ஆகவே இந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி 2.0 திரைக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 6-ம் தேதி தீபாவளி. எனவே தீபாவளிக்கு 2.0 ரிலீசாகும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி தீபாவளிக்கு பிறகு வருகிறது 2.0. நேற்று நள்ளிரவு ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கழுகு இடம்பெற்றுள்ளது. வில்லன் அக்சய்குமாரின் முகத் தோற்றம் கழுகு வடிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளார். அக்சய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் இது. ஒரு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்தது. கடந்த ஒரு ஆண்டாக இதன் கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு நாடுகளில் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டூடியோக்களில் நடந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.