அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் தமிழ்ப்படம்-2. ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட தமிழ்ப்படம் என்ற படத்தின் இரண்டாம் பாகம் என்ற போதும், இந்த படத்திற்கு தமிழ்ப்படம் 2.0 என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு கிடைக்கவில்லை என்றதும் இப்போது தமிழ்ப்படம் 2 என்று மாற்றி படத்தை இந்த மாதம் வெளியிட தயாராகி விட்டனர்.
இந்த படத்தின் முதல் போஸ்டரிலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு அமர்ந்து தியானம் செய்தது போன்று, மிர்ச்சி சிவா இடம்பெற்ற காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன்பிறகு இந்த படத்தின் டிரைலர், பாடல் என ஒவ்வொன்றும் வெளியானபோதும் சினிமா, அரசியல் வட்டாரத்தை சேர்ந்த பல பிரபலங்களை கலாய்த்திருப்பது தெரிய வந்தது. அதோடு சென்சாரில் படத்திற்கு யு சான்று கிடைத்தது. அதையும் பாகுபலி போஸ்டருடன் ஒப்பிட்டு கலாய்த்தனர்.
தற்போது படம் ஜூலையில் வெளியாகயிருக்கும் செய்தியை வெளியிட்டுள்ள போஸ்டரில் தமிழ்ப்படம்-2 படத்தின் போட்டோவை வைக்காமல், நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷின் படத்தை வைத்து கலாய்த்துள்ளனர்.