ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், துணை தலைவர் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அதற்கு பதிலாக 30 கொண்ட அட்டாக் கமிட்டியையும் அமைத்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திரா கிளப்பில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, இனி எந்த காரணம் கொண்டும் பெப்சி அமைப்போடு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்பது. ஆனால் அதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீறி விட்டார். அவரின் இந்த செயல் தயாரிப்பாளர் உறுப்பினர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து 2 துணை தலைவர் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பல உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய இருக்கின்றனர். இதனால் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் 30பேர் கொண்ட அட்டாக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி பெரிய அளவில் எதில் தலையிட முடியாது. எனவே சங்கத்தின் நிர்வாகத்தினை நடத்துவது, செயற்குழு கூட்டம் கூட்டுவது மற்றும் தேர்தலை நடத்துவது போன்ற பணிகளை செய்யும். இன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் செயல் இழந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் இடையே ஏற்பட்டு இருக்கும் இந்த பிளவு, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தலை உருவாக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.