ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய பி.ராஜபாண்டியிடம் உதவியாளராக இருந்த வள்ளிமுத்து இப்போது இயக்குனராகிவிட்டார். பார்த்திபன் காதல் என்ற படத்தை இயக்குகிறார். இதில் யோகி, வர்ஷிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தங்கையா ஒளிப்பதிவு செய்கிறார், பில்லா இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஜோ ஜார்ஜ் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார். எஸ் சினிமா என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றி வள்ளிமுத்து கூறியதாவது:
எனது சொந்த ஊரான கோவில்பட்டியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து சென்னைக்கு ஓவியம் கற்கச் சென்ற மாணவனின் காதல் அனுபவம் தான் படம்.
காதலை நேசிப்பவர்கள், காதலை ஆதரிக்கிறவர்கள், ரசிக்கிறவர்கள் தங்கள் வீட்டில் ஒரு காதல் என்றால் ஏன் அனுமதிப்பதில்லை என்ற கேள்வியை முன்வைத்து அதற்கு பதில் சொல்லும் படம். அறிமுக நாயகன் யோகி, ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப் பேய் படங்களும், ஆக்ஷ்ன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.