ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இரண்டு மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பது நடிகர் பஹத் பாசிலுக்கு புதிதில்லை தான். ஆனாலும் இந்த முறை ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் நடித்துள்ள, சூப்பர் டீலக்ஸ் படமும் படத்தின் படப்பிடிப்பும், அவரை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஒரு மிக பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் பஹத் பாசில்
"இந்த படத்தில் நடித்தது ரொம்பவே உற்சாகமாக உள்ளது. இதுவரை நான் நடித்த மல்டி ஸ்டாரர் படங்களிலேயே இந்த படம் மிக சிறந்ததாக இருக்கும். காரணம், இதில் நடித்துள்ள அத்தனை பேரும் மிக சிறந்த நடிப்பை வழங்கி உள்ளனர்.
அதுமட்டும் அல்ல தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்களிடம் வேலை செய்வதே புதிய அனுபவமாக இருந்தது. அவருடன் பணிபுரிவது எவ்வளவு சிரமம் என்று அறிந்திருந்தாலும் மீண்டும் அவருடன் பணிபுரிய ஆவலாக உள்ளது" என கூறியுள்ளார் பஹத் பாசில்.