ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் "துருவ நட்சத்திரம்". விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் முதன்மை ரோலில் நடித்திருக்கின்றனர்.
ஆக்ஷ்ன் நிறைந்த த்ரில்லர் படமாக, முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.
துருவ நட்சத்திரம் கதையில் ரஜினி நடிக்க இருந்தார் என கவுதம் மேனன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...
தயாரிப்பாளர் தாணு மூலமாக துருவ நட்சத்திரம் கதையை ரஜினியிடம் சொன்னேன். கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடித்து போனது. படம் எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு நாள் கால்ஷீட் வேண்டும், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என கேட்டார். படம் பண்ணலாம், யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் வீட்டில் மட்டும் வேண்டுமானால் சொல்லுங்க என்று கூறி சந்தோஷமாக எங்களை அனுப்பி வைத்தார்.
நான் எனது குழுவுடன் படம் பற்றி திட்டமிட்டு கொண்டிருந்தேன். தாணு போன் செய்தார். ரஜினியிடம் யாரோ எதையோ சொல்லிட்டாங்க, படம் இப்போது வேண்டாம் என கூறிவிட்டார் என்றார். யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. நல்லவர்கள் யாரோ, எதையோ சொல்லியிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
இவ்வாறு கவுதம் மேனன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.