மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரபல நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவிடி தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அந்த எண்ணை நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். நான் நடித்த விளம்பர படத்தை ஒரு ஆண்டு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டி ஒளிபரப்புகிறார்கள். அதனால் எனக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு விளம்பர படத்தின் உரிமையானது 60 ஆண்டுகள் வரை அந்த நிறுவனத்துக்கே சொந்தமானது. ஓராண்டு மட்டுமே அந்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது. நடிப்பதற்கு சம்பளம் பெற்றுக்கொண்டு விளம்பரத்தில் நடித்து கொடுத்ததோடு நடிகை காஜல் அகர்வாலின் பங்கு முடிந்துவிட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்' எனக்கூறி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து காஜல் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கீழ்கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தது.