ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. சூர்யாவின் '2D ENTERTAINMENT' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தின் பாடல்கள் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கார்த்தி நடிக்கும் படத்துக்கு முதன் முதலாக டி.இமான் இசையமைத்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி பேச வரும் படம் என்று சொல்லப்படும் நிலையில், இந்த தகவலை பாண்டிராஜ் மறுத்திருக்கிறார். கார்த்தி இந்தப் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார் என்பது உண்மைதான் ஆனால் இது விவசாயம் பற்றிய படமில்லை, பேமிலி செண்ட்டிமெண்ட் படம் என்கிறார்.