Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காலா' ரஜினிக்கான படமா? - சமூக வலைத்தள கிண்டல்

08 ஜூன், 2018 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Fans-Troll-Rajini-for-Kaala

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஞ்சித் ஆதரவாளர்கள் படத்தை ஆகா, ஓகோவென பாராட்டி வருகிறார்கள். அற்புதமான கருத்துக்களை ரஞ்சித் படத்தில் வைத்திருக்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சியையே ரஞ்சித் சொதப்பியிருக்கிறார், 'வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்' வசனத்தை வீணாக்கி விட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் குறியீடுகளாக அம்பேத்காரை முன்னிலைப்படுத்தியும், ராமர், வினாயகர், கிருஷ்ணர் ஆகிய கடவுள்களை எதிர்த்தும் உள்ளார் என்றும் பக்தியாளர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.

நடுநிலைவாதிகள் இந்தப் படத்தை ரஜினிகாந்த் அத்தனை முறை பார்த்தேன் என்று சொன்னாரே, படம் அருமையாக உள்ளது என்று வேறு பாராட்டினாரே, அப்புறம் ஏன் போராடக் கூடாது என்று நிஜத்தில் வசனம் பேசினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

முதலில் படத்தில் உள்ள கருத்துக்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டாரா, அப்படி புரிந்து கொண்டிருந்தால் அவர் பேட்டிகளில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று சொல்லியிருக்க மாட்டாரே என்கிறார்கள். ஆன்மீக அரசியல் நடத்த உள்ளேன் என்று சொல்பவர், ஆன்மீகத்தை எதிர்க்கும் காட்சிகளில் எப்படி நடித்தார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கான, மக்களுக்கான படமல்ல, ரஜினிகாந்த்திற்கான படம், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா'இந்து கடவுள்களை காரணம் இன்றி ... ஜூன் 11-ல் விஸ்வரூபம் 2 டிரைலர் : ஸ்ருதி, அமீர்கான், ஜூனியர் என்டிஆர்., வெளியிடுகின்றனர் ஜூன் 11-ல் விஸ்வரூபம் 2 டிரைலர் : ஸ்ருதி, ...


வாசகர் கருத்து (13)

Fermin - Gaborone,போஸ்ட்வானா
09 ஜூன், 2018 - 14:29 Report Abuse
Fermin அவர் விஷ கிருமிகள் என்று சொன்னது போராட்ட காரர்களை அல்ல வேண்டும் என்று கலவரத்தை தூண்டியவர் மீது
Rate this:
RS -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2018 - 14:21 Report Abuse
RS அது ஒரு படம்.. நிஜத்தையும் நிழலலையும் ஒன்று என நினைக்க கூடாது. கதையில் வர மாதிரி பறந்து fight aa செய்ய பேறாங்க. Just Story யை Story மட்டும் பார்க்கனும்
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
09 ஜூன், 2018 - 13:40 Report Abuse
Ab Cd இந்து கடவுள்களை எதிர்த்துள்ளனர் எனும் போது இந்த பிஜேபி யினர் அமைதியாக இருப்பதன் உல் நோக்கம் என்னவோ ..
Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
09 ஜூன், 2018 - 13:05 Report Abuse
Vaidhyanathan Sankar nantavanaththil ore aandi,avan naaloru maathamaai kuyavanai vi koduvanthaan oru thondiathai kooththadi kooththadi pottudaiththaandi
Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
09 ஜூன், 2018 - 13:02 Report Abuse
Vaidhyanathan Sankar வெங்காய அரசியலுக்காக ஆன்மீக அரசியல் அடகுவைக்கப்பட்டுவிட்டது
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in