ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். இதுவரை குணசித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், முதன்முறையாக தற்போது தாதா 87 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனகராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் மிரட்டலான நடிப்பை சாருஹாசன் வெளிப்படுத்தியுள்ள போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு ஏஜிங் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளனர்.
ரஜினியின் காலா படம் திரைக்கு வந்திருப்பதை அடுத்து, தாதா 87 படத்தின் விளம்பர போஸ்டரில் ரஜினி, சாருஹாசன் போட்டோவை இணைத்து வாழ்த்து சொல்லியுள்ளனர். அந்த போஸ்டரில் சாருஹாசனை ஏஜிங் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
சமீபகாலமாக ரஜினியை உயர்வாக பேசி வருகிறார் சாருஹாசன். ரஜினியை மக்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி தான் என கூறியிருந்தார்.