ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குட்டிபுலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய பி.முத்தையா அடுத்து இயக்கும் படம் தேவராட்டம், ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது கவுதம் கார்த்திக் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலையாள சினிமாவில குழந்தை நட்சத்திரமாக இருந்த மஞ்சிமா மோகன் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் அதன் பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்தார். இப்போது தேவராட்டம் படத்தில் நடிக்கிறார்.