ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஸ்வரூபம்-2 படத்தை அடுத்து கமல் இயக்கி நடித்து வந்த படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு என்ற கேரக்டரை பிரதானப்படுத்தி இந்த படம் உருவாகிறது. கமலுடன் ரம்யாகிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார்.
2016ல் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில், கமலுக்கு காலில் அடிப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது இப்படம். இந்த நிலையில், தற்போது சபாஷ் நாயுடு பட வேலைகள் மீண்டும் தொடங்க இருப்பதாகவும், ஆகஸ்டு மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.