ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்த இளையராஜாவிற்கு இன்று(ஜூன் 2) 75வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமானபேர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்தினார். பல திரையுலக பிரபலங்களும் டுவிட்டரில் வாழ்த்தினர்.
தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரசிகர்களுடன் போட்டோ எடுதப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இளையராஜா. அதன்படி இந்தாண்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான ரசிகர்கள் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து சொல்லி அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். சென்னை, வடபழனியில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடந்தது.
மேலும் திரையுலக பிரபலங்களான எஸ்.பி.முத்துராமன், சங்கிலி முருகன், அம்மா டி.சிவா, சுப்ரமணிய சிவா, கலைப்புலி தாணு, விவேக் உள்ளிட்ட பலரும் இளையராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலங்களான ரக்ஷிதா, சக்தி, மாளவிகா, ஸ்ரீகாந்த், திவாகர் உள்ளிட்ட பலர் இளையராஜாவின் பாடல்களை பாடினர்.