ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. அதனால், அங்கு 'காலா' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'காலா' படத்தை தீர்த்து வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் இருக்கிறார். ஆனால், அவர் இதுவரை சங்கத்தில் அதிக அளவில் ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும் 'காலா' விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரகாஷ் ராஜ், கர்நாடகா வர்த்தக சபையுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். அதே சமயம் ரஜினிகாந்த் தரப்பிலும் அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.
இன்று மாலைக்குள் பிரச்னை பேசி முடிக்கப்பட்டு 'காலா'படம் கர்நாடகாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி வெளியிட முடிவு செய்யப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.