அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
பசங்க பாண்டிராஜ் தயாரித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சில நாட்கள் ஸ்பாட்டுக்கு சென்றபோது, அர்த்தனாவின் யதார்த்தமான நடிப்பு பாண்டிராஜை கவர்ந்துள்ளது.
அதன்காரணமாகத்தான், தற்போது கார்த்தி நடிப்பில் தான் இயக்கி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு சாய்ஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் என இரண்டு நடிகைகள் ஒப்பந்தமான நிலையில், இன்னொரு வேடத்துக்கு நடிகை தேடி வந்த அவர், அந்த வேடத்திற்கு அர்த்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும், செம படத்தைப்போலவே கடைக்குட்டி சிங்கம் படத்திலும் கிராமத்து வேடத்தில் இயல்பாக நடித்துள்ளாராம் அர்த்தனா.