பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது ஏதேனும் சர்ச்சை கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சை இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர், தற்போது ராம்கோபால் வர்மா அன் ஸ்கூல் என்ற பெயரில் ஒரு திரைப்பட பள்ளி திறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதில், நியூயார்க்கைச் சேர்ந்த ராம் ஸ்வரூப், ஸ்வேதா ரெட்டி ஆகியோர் பயிற்சி கொடுக்கிறார்களாம். இந்த இன்ஸ்டிடியூட்டில் கடந்த கால சினிமா மட்டுமின்றி எதிர்கால சினிமா குறித்தும் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறதாம்.
அதோடு தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களான வம்சி கிருஷ்ணா, பூரி ஜெகன்னாத், தேஜா ஆகியோரும் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக சென்று சினிமா குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்களாம்.