ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இப்போதெல்லாம் வெளிவரும் எல்லா படத்திலும் நடித்திருப்பவர் யோகி பாபு. கைவசம் 30 படங்கள் வைத்திருக்கிறார். குறுகிய காலத்தில் 100 படங்களை தாண்டி விட்டார். சம்பளமும் ஒரு நாளைக்கு லட்சங்களில் வாங்குகிறார். இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிற படங்களும் நிறைய இருக்கிறது. தற்போது விஜய் நடித்து வரும் படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார்.
இந்த நிலையில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் காதல் பாட்டு பாடியதிலிருந்து யோகி பாபு செம ஹேப்பி. அந்த பாடல் காட்சியை தன் செல்போனில் பதிவு செய்து வைத்து எல்லோரிடம் காண்பித்து உற்சாகமாக இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒன் சைடாக லவ் பண்ணும் பலசரக்குகடைக்காரராக நடித்திருக்கிறார். காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்த பிறகு புதிதா சேர்க்கப்பட்ட பாடல் இது.
"எத்தனை நடிகைகள் என் பக்கத்தில் நின்று நடிக்கவே தயங்கினார்கள் தெரியுமா, நயன்தாரா தைரியமா என்னை லவ் பண்ணி நடிங்க என்றார். அவர் மாதிரி நடிகையே கிடையாது. இன்னும் 100 வருஷம் அவர் வாழ்வார், ஆயிரம் படங்கள் நடிப்பார். சினிமாவுக்கு வந்த பலனை அடைந்து விட்டேன்" என்று நயன்தாரா புகழ்பாடிக் கொண்டிருக்கிறார் யோகி பாபு.