ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹரி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 'சாமி ஸ்கொயர்| படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யு டியூபில் இந்த மோஷன் போஸ்டர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இதுவரை வெளிவந்த மோஷன் போஸ்டர்களில் சிரஞ்சீவியின் 'சை ரா' படத்தின் மோஷன் போஸ்டர் தான் அதிக லைக்குகளைப் பெற்ற போஸ்டர் என்ற சாதனையை வைத்திருந்த்து. 75 ஆயிரம் லைக்குகளைப் பெற்றிருந்த அந்த சாதனையைக் கடந்து 'சாமி ஸ்கொயர்' படத்தின் மோஷன் போஸ்டர் 89 ஆயிரம் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும் 30 லட்சம் பார்வைகளும் இதற்கு கிடைத்துள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த 'சாமி' படம் 2003ம் ஆண்டு வெளிவந்து பெரிய வசூலைப் பெற்றது. 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் படத்திலிருந்து வெளியேறினார். 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.