ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அட்டகத்தி' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தொடர்ந்து 'பீட்சா', 'சூது கவ்வும்', 'குக்கூ', 'மெட்ராஸ்', '36 வயதினிலே', 'இறுதிச்சுற்று', 'கபாலி', 'பைரவா', 'மெர்க்குரி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.
அடுத்ததாக ரஜினி நடித்த 'காலா' படம் அவர் இசையமைப்பில் ரிலீஸாக இருக்கிறது. ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், அருள்தாஸ், சாக்ஷி அகர்வால், மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகிறது.
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் தன் மனைவியுடன் ரஜினியின் இல்லத்துக்குச் சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றார். வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு இன்ப அதிர்ச்சி.
'சனா' (சந்தோஷ் நாராயணனின் சுருக்கம்), 'ஹேப்பி பர்த்டே நண்பா' என பிரிண்ட் செய்து, 'பிரியமுடன் விஜய்' கையெழுத்திட்டு அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளார் விஜய்.
அதை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சந்தோஷ் நாராயணன். “விஜய் சாரிடம் இருந்து மிகச்சிறப்பான ஆச்சரியப் பரிசு கிடைத்திருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேட்டில், உங்கள் கையெழுத்திட்டுத் தந்ததில் மகிழ்ச்சி. இது எனக்கு மிகச்சிறப்பான தருணம். நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் கிரிக்கெட் பேட்டுக்கும் என்ன சம்மந்தம் என்று தான் தெரியவில்லை...!