ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன்.
150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார்.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.
பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன்.
சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
இவ்வாறு சிவகுமார் கூறினார்.