ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தொலைக்காட்சியில் ஒரு சாதாரண போட்டியாளராக நுழைந்து அதில் வெற்றி பெற்று அதே தொலைக்காட்சியில் வர்ணனையாளராக உயர்ந்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாகவும் வளர்ந்துவிட்டார். அவருடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்த சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தின் தலைப்பு மற்றும், முதல் பார்வை அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
படத்திற்கு கனா என பெயரிட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பதால் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வீராங்கனையாகத் துடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் கனவு தான் கனாவாக வைத்துள்ளனர்.
Here s d motion poster of #Kanaa #கனா - https://t.co/rq7Sf5vKc7 #SivakarthikeyanProductions #Sathyaraj sir @aishu_dil @darshan991 @dineshkrishnanb @AntonyLRuben @artilayaraja @iamdhibu @Pali2285 @dancersatz @klaeking @SonyMusicSouth
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 15, 2018