சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் |
ராஜ் டி.வியில் கண்ணம்மா என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. பாரதி அசோசியேட் தயாரிக்கும் இந்த தொடரை, க்ளைடன் சின்னப்பா இயக்குகிறார்.
கண்ணம்மா அழகி, அறிவில் சிறந்தவள், துணிந்தவள், பாரதி கண்ட கண்ணம்மா போன்று சுதந்திரமானவள். ஆனால் அவளது குடும்ப சூழல் அவள் இயல்புக்கு ஏற்ற மாதிரி இல்லை.
அப்பாவின் கோபத்தால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் கண்ணம்மா. அவருக்கு உதவியாக தையல் கடையில் வேலை பார்க்கிறாள். அவள் உருவாக்கும் புதிய டிசைன்கள் பிடித்து அவளை ஒரு பெரிய நிறுவனம் வேலைக்கு அழைக்கிறது. கண்ணம்மா குடும்பம் வசதியாகிறது.
ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கம்பெனி முதலாளியையே திருமணம் செய்து கொள்கிறாள் கண்ணம்மா. அந்த திருமணத்தை முதலாளி குடும்பம் விரும்பவில்லை. கண்ணம்மாவை வீழ்த்த சதி செய்கிறார்கள். அவற்றிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதை. கண்ணம்மாவாக அர்ச்சனா நடிக்கிறார்.