ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2010ம் ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படம் ஜூலிஸ் ஐஸ். திகில் பட உலகின் புதிய அத்தியாயமாக அமைந்த படம். ஜூலியின் சகோதரியை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் மெத்தனம் காட்டுகிறது. தானே கண்டுபிடிக்க கிளம்புகிறாள் ஜூலி.
கொலையாளியை நெருங்கும் நேரத்தில் ஜூலி கண்பார்வை இழக்கிறார். அதன் பிறகு அவர் எப்படி கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் குயிலம் மொராலஸ் இயக்கி இருந்தார். பெலன் ரியூடா ஜூலியாக நடித்திருந்தார்.
இந்த படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்கிறார்கள். மைக்கேல் மதன காமராஜன் உள்பட தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் கபீர்லால் இயக்கி, தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இத்திரைப்படம். இதை இந்தியாவிற்கும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும், தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்ய போகிறேன். பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். ஜூலி கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் கபீர்லால்.