Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் பதவி விலக வேண்டும் : அதிருப்தி தயாரிப்பாளர்கள்

13 மே, 2018 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Vishal-shouldProducer-council-president-says-producers

நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு அவரும், சங்கத்தில் இருக்கும் மற்ற நிர்வாகிகளும் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இது ஒரு சாரருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக டி.ராஜந்தர், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும்போது....

தேர்தலின் போது விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துடன் அவர் டீல் பேசியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளார். 45 நாட்களாக தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை, தனது படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மட்டுமே இருந்திருக்கிறார்.

தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர்கள் இந்த சங்க அமைப்பு தேவையா. முறையற்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு தேர்தல் அறிவித்து முறையான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

Advertisement
மோகன்லாலைத் தொடர்ந்து சூர்யாவுடன் அல்லு சிரிஷ்!மோகன்லாலைத் தொடர்ந்து சூர்யாவுடன் ... இந்து கடவுள் பற்றி விமர்சனம்: பாரதிராஜா மீது வழக்கு பதிவு இந்து கடவுள் பற்றி விமர்சனம்: ...


வாசகர் கருத்து (10)

Idithangi - SIngapore,சிங்கப்பூர்
14 மே, 2018 - 14:25 Report Abuse
Idithangi டி ஆர், ராதா ரவி, பாரதிராஜா . ராஜன் எல்லாம் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் தெரியுமாம்? எத்தனை படம் எடுத்து இருக்கானும்க ? கடைசியா எப்போ படம் எடுத்தனும்க..? டி ஆர் அவன் மகனை வெச்சி படம் எடுக்க மாட்டார். இவனுங்க எல்லாம் இதை பத்தி பேசறதே தவறு.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 மே, 2018 - 13:45 Report Abuse
Mirthika Sathiamoorthi அரசியல் காட்சிகள் பொதுவாக ஆளும் கட்சியின் குறைகளை மக்கள் முன் கொண்டு செல்ல பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஊழல் குற்றங்கள் சுமத்தும்.. இது வரும் தேர்தலில் மக்களின் மனதில் ஒரு பாதிப்பு உண்டு பண்ணும்.. இல்லையே ஒரு பொது பிரச்சனையில் கருது கூற பத்திரிகையாளரை கூட்டலாம்.. சங்க பிரச்சனைக்கு எதற்கு பத்திரிகையாளர் சந்திப்பு? சங்க தேர்தலில் ஓட்ட மக்களா போடுறாங்க? இல்ல பொது பிரச்சனையா? அடுத்தது தேர்தல் அறிவிக்க வேண்டும் அப்போ விஷால் தேர்தல் இல்லாம தேர்ந்தெடுத்தாங்களா? ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்த ஒருத்தர் பதவி விலகனுமாம்... அப்போ மறு தேர்தலிலும் விஷால் ஜெயிச்ச? அப்பவும் மறு தேர்தல? அடுத்த நம்ம பாரதி... அது காமெடி பீஸ்... தமிழன் தான் சங்க தலைவனாக இருக்கணுமாம்... அப்போ தமிழ் படத்தை தமிழன் அல்லாதவன் தயாரிச்சா?... தமிழ் படத்தை வேற மொழியில் ரீமேக் பண்ணி தமிழன் அல்லாதவன் பாத்தா?.... தமிழ் படத்தை வேறு நாட்டு விருதுக்கு அனுப்புச்ச? அத விடுங்க... தமிழ் படத்துக்கு கதை வேற மொழியில் வந்த படத்துல சுட்ட? அதெல்லாம் சரி ஆனா தமிழன் அல்லாதவன் தலைவனாக கூடாது.. மொதல்ல தமிழ்நாட்டை தமிழன் தலைமை தங்கணும்... இப்போ, சங்கத்துக்கு தமிழன் தலைமை தங்கணும்.... நாளைக்கு, குடும்பத் தலைவன் தமிழனா மட்டும் இருக்கணும்.... அது எந்த குடும்பமா இருந்தாலும்.... அட போங்கய்யா.. பெரிய படம் நெறய திரை அரங்குகளில் ரிலீசே ஆகக்கூடாது.... இது யாரையோ குறி வைக்கிற மாதிரி இருக்கு..
Rate this:
gopalakrishnan - tirupur,இந்தியா
14 மே, 2018 - 12:58 Report Abuse
gopalakrishnan இந்த பாரதி ராஜாவை பார்த்தாலே அருவருப்பா இருக்கு , என்ன கேவலமான ஜென்மம் , இளையராஜாவின் கால் தூசிக்கு கூட லாயக்கு இல்லை
Rate this:
Karthik - Chennai ,இந்தியா
14 மே, 2018 - 09:46 Report Abuse
Karthik Bharathiraja is a shame to TN. If ilayaraja was not there, no one will remember bharathiraja movies.
Rate this:
natarajan s - chennai,இந்தியா
14 மே, 2018 - 08:29 Report Abuse
natarajan s முன்னாள் நிர்வாகிகள் அவர்களது காலத்தில் செய்த முறைகேடுகளை இவர் கேள்வி கேட்டதால் கொந்தளிக்கிறார்கள். திரு விஷால் வந்த பிறகுதான் பல வறிய கலைங்கர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்று திரை உலகதினர் கூறும் வேளையில் இவர்கள் தங்களது தவறுகளை மறைக்கவே இதுமாதிரி செயல் படுகிறார்கள். அரசு திரைப்பட துறையினருக்கு வீடு கட்ட ஒதுக்கிய நிலத்திலும் மோசடி நடந்துள்ளதாக ஒருகுற்றச்சாட்டு ள்ளது . அதற்கு பதில் இல்லை இவர்களிடம். இப்போதுதான் நடிகர் சங்கம் செயல் படுகிறது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in