பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக்கை இங்கே ரசிகர்கள் பலருக்கு தெரிகிறதோ இல்லையோ அவர் இயக்கிய 'பிரண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'காவலன்' ஆகிய படங்களை அவர்கள் பார்க்காமல் இருக்க முடியாது.. அந்த அளவுக்கு காமெடி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் படங்களை தருவதில் வல்லவரான சித்திக், தற்போது, தமிழில் அரவிந்தசாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்தநிலையில் நேற்று (மே-11) இந்தப்படம் ரிலீஸாவதாக உறுதியாக அறிவிக்கப்படிருந்த நிலையில் படத்தை வெளியிடுபவரின் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக நேற்று படம் ரிலீஸாகவில்லை.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த 'காவலன்' படம் கூட அதன் ரிலீஸ் சமயத்தில் வேறுவிதமான சிக்கலை சந்தித்து ஒரு வழியாக ரிலீஸானது.. அதனாலேயே மிகப்பெரிய வெற்றிபெற வேண்டிய அந்தப்படம் சுமாரான வெற்றியையே பெறமுடிந்தது.. ஏழு ஆண்டு கழித்து இப்போதும் சித்திக் படம் ரிலீஸில் பிரச்சனையை சந்திப்பதை என்னவென்று சொல்வது..?