ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அங்காடி தெரு மகேஷ் நடிக்கும் புதிய படம் என் காதலி சீன் போடுறா. அவருக்கு ஜோடியாக ஷாலு என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். புதுமுகம் ராம்சேவா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இன்றைய சமூகத்தில் யாரும் முட்டாள்கள் இல்லை. எல்லோருமே புத்திசாலிகள் தான். ஆனால் புத்திசாலிகளை ஏமாற்றுகிற அதி புத்திசாலிகளும் இருக்கிறார்கள் என்பது தான் விஷயம். அதனால் யாரும் யாரையும் ஏமாற்றாதீர்கள், யாரிடமும் ஏமாறாதீர்கள் என்கிற கருத்தை ஒரு அழகான காதலின் வழியாக சொல்கிறோம். சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. என்றார்.