ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' படம் சீனாவில் சுமார் 7000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் நடைபெற்ற சுமார் 53,000 காட்சிகளில் 5 லட்சம் பேர் படம் பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 16 கோடி வசூலித்து நேற்றைய வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இது 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் வசூலை விட அதிகமாகவும் 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார், ஹிந்தி மீடியம்' படத்தை விட குறைவாகவும் அமைந்துள்ளது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் படம் பற்றிய தகவல் நன்றாகப் பரவி வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் 'பாகுபலி 2' படம் வெளியாகியுள்ளது. சீனாவில் 300 கோடி வசூலித்தால் 2000 கோடி வசூலை உலக அளவில் தாண்ட இந்தப் படத்திற்கு பெரிய வாய்ப்புள்ளது. படத்திற்கான விமர்சனங்களும் சிறப்பாக இருப்பதாக சீனாவில் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்கள் Iவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.