ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' படம் இம்மாதம் 18-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து 'திமிரு பிடிச்சவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த கணேஷா இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ்காரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் நடித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது.
திமிரு பிடிச்சவன் படத்துடன் 'கொலைகாரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை ஆண்ட்ரு என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார். ஆனால் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
ஏற்கெனவே சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்று நெகட்டிவ்வான டைட்டில் வைத்து வரும் விஜய் ஆண்டனி, 'கொலைகாரன்' என்று டைட்டில் வைத்து மீண்டும் அதிர்ச்சயளித்திருக்கிறார்.
இதற்கிடையில் 'திருடன்' என்ற படத்திலும் 'மூடர்கூடம்' நவீன் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி!
நவீன் இயக்கும் படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிக்கிறார்.