Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீட் : மாணவர்களுக்கு உதவ விஷாலும் முன் வந்தார்

05 மே, 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Vishal-also-ready-to-help-for-Neet-students

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும், தமிழ்நாட்டு மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல ரெயில்களில் டிக்கெட் இல்லை. பஸ்களில் செல்ல முடியாது. ஒரே வழி விமானம் தான். ஆனால் அதற்கு ஆயிரக் கணக்கில் செலவாகும். எல்லா மாணவர்களுக்கும் அந்த சக்தி இல்லை.

இதனால் பல அமைப்புகள் இந்த மாணவர்களுக்கு உதவ முன் வந்தன. அவர்களுடன் பல திரைப்பட நட்சத்திரங்களும் முன் வந்தனர். நடிகர் பிரசன்னா "நீட் தேர்வுக்கு வெளி மாநிலம் செல்லும் 2 மாணவர்களின் விமான கட்டணத்தை ஏற்க தயார்" என்று முதலில் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் அருள்நிதி 20 மாணவர்களின் விமான கட்டணத்தை ஏற்பதாக அறிவித்தார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தன்னை தொடர்பு கொள்பவர்களுக்கு உதவுவதாக அறிவித்தார்.

நடிகர் விஷால் எந்த மாணவர் வேண்டுமானாலும் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு எந்த உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து தனது டெலிபோன் நம்பரையும் வெளியிட்டார்.

"நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து தொடர்பு கொள்ளலாம். எனது தொடர்பு எண் "97104 44442" என விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in