ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவை தாண்டி நடிகர் அஜித், பைக், கார் ரேஸ், போட்டோகிராபி போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக இவற்றையும் தாண்டி டிரோன் என்று சொல்லப்படும் ஆளில்லா விமானங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே சில சோதனைகளை செய்திருக்கிறார். இதுதொடர்பாக சமீபத்தில் எம்ஐடி., மாணவர்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் எம்ஐடி.,யின் “ஹெலிகாப்டர் சோதனை விமானி மற்றும் ஆளில்லா விமானம்(டிரோன்) பயிற்சி ஆலோசகராக” அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் நடைபெறகின்றன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவுவான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி பிரிவு மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் அஜித், தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அஜித், இந்த மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்காக ரூ.1000 மட்டும் சம்பளமாக பெறுகிறார்.