ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'அவெஞ்சர் இன்பினிட்டி வார்' திரைப்படம் உலக அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வாரத்தில் மட்டும் இப்படம் 305 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. குறைந்த நாட்களில் 300 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. இதுவரை 'ஸ்டார்வார்ஸ் - தி போர்ஸ் அவேக்கன்ஸ்' படம்தான் 300 கோடி வசூலை விரைவில் பெற்ற படம் என்ற சாதனையை வைத்திருந்தது. அதை அவெஞ்சர்ஸ் படம் முறியடித்துள்ளது.
மேலும் இப்படத்தின் முதல் வார வசூல் 808.4 மில்லியன் யுஎஸ் டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் 5332 கோடி ரூபாய். இந்தியாவில் மட்டும் இதுவரை 170 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தொட்டிருக்கிறது. இந்த வாரத்திற்குள் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்களே எதிர்பார்க்காத அளவிற்கு இந்தப் படத்தின் வசூல் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஆங்கிலப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் படத்தில் இருந்தால் அது வசூலைக் குவிக்கும் என்பதை இந்தப் படம் மீண்டும் புரிய வைத்திருக்கிறது.