மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சுமார் 300 கோடியில் படமாக்கப்பட்டதாகத்தான் செய்திகள் வெளியாகின. முதல் பாகம் வெளியான போதே இரண்டாவது பாகத்தின் 40 சதவீதத்தையும் எடுத்து முடித்தார்கள். 300 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 1700 கோடி வசூலித்தது. மிகப் பெரும் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாக அமைந்தது.
அந்தப் படத்தின் மூலம் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நாயகனாக வளர்ந்தார். அதனால், அவருடைய அடுத்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதற்கேற்றபடிதான் 'சாஹோ' படமும் உருவாகி வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி என்கிறார்கள். 'பாகுபலி' படங்களின் இரண்டு பாக பட்ஜெட்டே 300 கோடிதான். அப்படியிருக்க 'சாஹோ' படத்தின் பட்ஜெட்டே 300 கோடி என்பது அதிகம்தான்.
இப்படத்திற்காக துபாயில் படமாக உள்ள காட்சிகளை மட்டும் 90 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்க உள்ளார்களாம். இப்படத்தின் மூலம் உலக அளவில் தன்னுடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்திக் கொள்ள பிரபாஸ் ஆசைப்படுகிறார் என்கிறார்கள். படத்தை ஹாலிவுட் படங்களைப் போல உருவாக்கி வருகிறார்களாம்.