ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'பாகுபலி 2' படம் மிகப் பெரும் வசூலையும், வெற்றியையும் பெற்றது. உலக அளவில் 1700 கோடி வரை வசூலித்ததாகத் தகவல் வெளியானது. அதன் பின் சில மாதங்கள் கழித்து சீனாவில் வெளியாகும் என்றார்கள். ஆனால், அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் சீனா வெளியீடு உடனே நடக்கவில்லை. நாளை மே 4ம் தேதிதான் 'பாகுபலி 2' சீனாவில் வெளியாகிறது.
அங்கு சுமார் 7000 தியேட்டர்கள் வரையில் இப்படம் வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவும் நன்றாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் சீனாவில் வசூலிக்கவில்லை. ஜப்பானில் வெளியான 'பாகுபலி 2' படம், படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களைக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனால், சீனாவிலும் பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் சமீபத்தில் வெளியான 'டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பஜ்ரங்கி பைஜான், ஹிந்தி மீடியம்' ஆகிய ஹிந்தி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் 'பாகுபலி 2' படமும் வரவேற்பைப் பெற்றால் பெரிய வசூலைக் குவிக்க முடியும்.