ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பள்ளி குழந்தைகளைகூட ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் சினிமாவில் ஹீரோயின்களை இயக்குனர்கள் அடிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனை சிலபேர் பொது மேடைகளில் அந்த ஹீரோயினை வைத்துக் கொண்டே பெருமையாக சொல்வதும் தொடர்கிறது. அந்த நேரத்தில் அந்த ஹீரோயின் மனசு எப்படி வலிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி பேசுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தொட்ரா படம்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் அந்த படத்தின் இயக்குனர் மதுராஜ் பேசும்போது "படப்பிடிப்பின் போது ஹீரோயின் வீணாவை அடித்து விட்டேன். படப்பிடிப்பில் நான் பலமுறை ஒரு சைக்கோ போன்று நடந்து கொண்டேன். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இதனை பேசும்போது ஹீரோயின் வீணா தலைகுனிந்து அமர்ந்திருந்நார். இத்தனைக்கும் மதுராஜ் ஒரு அறிமுக இயக்குனர்தான்.