ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மே 1-ந்தேதியான நாளை அஜீத்குமாரின் 47வது பிறந்தநாள் என்பதால், அதை சிறப்பாக கொண்டாடி மகிழ அஜீத் ரசிகர்கள் கட்அவுட், பேனர் என்று தடபுடலாக தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா, தல அஜீத்தின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு தான் பரிசு வழங்கப்போவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அது என்னவென்றால், மே 1-ந்தேதி அவர் நடித்துள்ள கஜினிகாந்த் படத்தின் டிரெய்லரை வெளியிடப் போகிறார்களாம்.
ஆனால் தனது இந்த டுவிட்டுக்கு அஜீத் ரசிகர்கள் பெரிதாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று ஆர்யா நினைத்தபோதும், அந்த படத்தை அடல்ட் பட இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியிருப்பதால், தல பிறந்தநாளில் அடல்ட் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதா? என்று அஜீத் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எருமைச்சாணி யுடியூப் சேனல் குழுவினர் நடித்துள்ள ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கும் நாளை வெளியாகிறது.