ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்கத்தலைவர், நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் பிசியாக உள்ளார் விஷால். இரும்புத்திரை, சண்டக்கோழி-2 என சில படங்களையும் தயாரித்து, நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் - அஜித் குறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் போராடி ஜெயித்தவர் விஜய். அவரைப்போன்று நடனமாட முடியாது என்று மற்றவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளார். விமர்சனங்களை அவர் காதில் வாங்கிக் கொள்வதில்லை. தனது இலக்கை மட்டுமே கருத்தில் கொண்டு செல்வார். விஜய்யின் இந்த குணம் ரொம்ப பிடிக்கும். மற்றபடி அவரிடம் பிடிக்காத விஷயங்கள் எதுவும் இல்லை.
அதேபோல், அஜித்திடமும் எனக்கு பிடித்தமான விசயங்கள் நிறைய உள்ளது. அவர் ஒரு நல்ல நடிகர் என்றாலும் நடிகர் என்ற முறையில் நடிகர்களே தொடர்பு கொள்ள முடியாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். அது ஒன்று தான் அவரிடம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் விஷால்.